கேஸ் விலை உயர்வு வாபஸ் இல்லையாம்: பிரணாப்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை,1 - டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நடைபெறும் 2 வது அமெரிக்க இந்திய பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க இந்திய குழுவினருடன் வந்துள்ள பிரணாப் முகர்ஜி, இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

நிதி பற்றாக்குறையை போக்குவதற்காகத்தான் டீசல், கேஸ் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்காக விலையை குறைக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டே டீசல், மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டது. அரசு ஏற்கனவே கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரியை குறைத்துள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 49 ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

டீசல் விலை குறித்து பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ள போதிலும் விலையை குறைக்க முடியாது. இருப்பினும் பல்வேறு மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளன. இதனால் சாதாரண மக்களின் மீதான சுமை குறைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டதால் நிதி பற்றாக்குறை அதிகரிக்குமா என்று கேட்டதற்கு இதனால் ஏற்படும் பற்றாக்குறை வரி வசூலை சிறப்பாக மேற்கொள்வதன் மூலம் இதை ஈடுகட்ட முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: