முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோவில்: குவிந்து கிடந்த நகைகள்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூலை 2 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் ரகசிய உள்ளறைகளில் தங்க வைர நகைகள் நவரத்தின கற்கள் மலைபோல் குவிந்து கிடந்தன. 3 தங்க குடங்களும் இருந்தன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் 18 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது. இன்றும் அந்த கோவில் அவரது பரம்பரையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் ஏராளமான அளவில் தங்கமும் வைரமும் இருப்பதாக கூறப்பட்டது. ஆகவே இந்த அறைகளை திறந்து பார்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. 

கோவிலில் உள்ள அந்த பாதாள அறைகள் ஒன்றன்பின் ஒன்றாக குழுவினரால் திறந்து பார்க்கப்பட்ட போது விலைமதிப்பற்ற தங்கமும், வைரமும் குவிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு அறையில் மட்டும் சுவாமிக்கு சூட்டப்படக்கூடிய மணிமகுடம், தங்க அங்கி மற்றும் சில விலைமதிப்பற்ற பொருட்கள் இருந்தன. ஒரு அறை இரும்புக் கதவால் பூட்டப்பட்டிருந்தது. அந்த கதவை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் திறந்துபார்த்ததில், அங்கு 12 க்கும் மேற்பட்ட மண்ணால் செய்யப்பட்ட கலங்கள் இருந்தன. அவை முழுவதும் நகைகளால் நிரம்பி வழிந்தன. ஆயிரத்தி இருநூறுக்கும் மேற்பட்ட தங்க சங்கிலிகள் இருந்தன. ஒரு சங்கிலி மட்டும் 3 கிலோ எடை இருந்தது. ஒரு தங்கச் சங்கிலியில் மட்டும் வைரமும், நவரத்தினக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. சில கலங்களில் ஏராளமான அளவில் தங்க தட்டுகளும், தங்க நாணயங்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்த நாணயங்கள் அனைத்தும் 1732 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவையாகும். சில கலங்களில் வைரமும், நீலமும், மரகதமும், புஷ்பராகமும் மற்றும் வேறு சில விலைமதிப்பற்ற கற்களும் இருந்தன. இந்த நகைகள் மற்றும் நவரத்தினக் கற்கள் மதிப்பிடப்பட இருக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ. 2000 ம் கோடிக்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த அறை உள்பகுதியில் உடனடியாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அருகில் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!