முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயில் யானைகள் பராமரிப்பிற்கான ஆலோசனைக் கூட்டம்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 - இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான யானைகளை பராமரிப்பது தொடர்பாக துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இக்கூட்டம் நேற்று முற்பகல் 11.00 மணிக்கு சென்னை, ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை, அரசு செயலாளர், டி.என். இராமநாதன்,   இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மு.கலைவாணன், பீர்.முகம்மது,  யானை பராமரிப்பாளர், தென்காசி, டாக்டர் மனோகர், வனத்துறை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான யானைகளை  பராமரிப்பது தொடர்பாகவும்,  அவற்றிற்கு வழங்கப்படும் உணவு,  சுற்றுப்புறச் சூழ்நிலை, யானைகளை காலமுறையில் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு உட்படுத்துதல், சுகாதாரம்,  தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பது குறித்தும்  கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆணையர் (விசாரணை),   இணை ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்),  திருவேற்காடு, பழநி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம் ஆகிய திருக்கோயில்களின் இணை ஆணையர், செயல் அலுவலர்கள், துணை ஆணையர், செயல் அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், உதவி ஆணையர்/செயல் அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோயில் யானைகள் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளின் பராமரிப்பு மற்றும் புத்தாக்கப்பயிற்சி சிறப்பாக நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் யானைகளின் பராமரிப்பு மற்றும் புத்தாக்க பயிற்சி நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது யானைகளின் புத்தாக்க பயிற்சி மீண்டும் உயிரிப்பித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago