முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலத்தடி நீரை கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், தலைவருமான, ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி, தமிழக அரசின் தலைமை செயலாளர் தேவேந்திராநாத் சாரங்கியை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து நிலத்திட நீரை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவதை தடைசெய்ய அவசர சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்திலுள்ள 385 ஒன்றியங்களில், 100-க்கு மேற்பட்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர் அபாயகரமான நிலைக்கு குறைந்து போய்விட்டதால், பரவலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எப்போதும் வறட்சிக்கு இலக்காகும் தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் இன்னும் பருவ மழை தொடங்காத சூழலில், கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  நிலத்தடி நீரை குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு அல்லாத பயன்பாட்டிற்கு, வணிகநோக்கத்தோடு தினமும் 1000-க்கான லாரிகளில் கடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, விளாத்திகுளம், புதியம்புத்தூர், கயத்தாறு, சாத்தான்குளம், கோயில்பட்டி போன்ற ஒன்றியங்களில் நிலத்தடி நீர் கடத்தப்படுவது, மிகவும் அதிகமாகிவிட்டது.

இதனால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே நிலத்தடி நீரை வணிக நோக்கத்தோடு பிறப்பகுதிகளுக்கு கடத்துவதை தடைச் செய்யும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுத்தொடர்பாக தலைமை செயலாளரிடம் மனுவும் அளித்துள்ளோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்