முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரவு தேவா - ரம்லத் மனமொத்து பிரிகின்றனர்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - நடிகர் பிரவு தேவா- ரம்லத் மனமொத்து பிரிகின்றனர். இவர்களின் வழக்கில் வரும் 7 ம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். -குடும்ப நல கோர்டில் நடிகர் பிரபு தேவா ஆஜராகி விவாகரத்து வழக்கை உடனே விசாரிக்க மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

நடிகர் பிரபுதேவாவும் அவரது மனைவி ரம்லத்தும் கடந்த மாதங்களுக்கு முன்பு பரஸ்பர முறையில் விவாகரத்து செய்து கொள்வதாக குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.   பிரபுதேவா தனது இரு மகன்கள் மற்றும் ரம்லத்துக்கு கிழக்கு கடற்கரையில் உள்ள வீடு, அண்ணாநகரில் உள்ள வீடு மற்றும் ஐதராபாத்தில் உள்ள இரண்டு பிளாட்டுகள் போன்றவற்றை எழுதி கொடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து ரம்லத் விவாகரத்துக்கு சம்மதித்தார். கடந்த வியாழக்கிழமை இவ்வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டு nullநீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரபுதேவாவும், ரம்லத்தும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு nullநீதிபதி தள்ளி வைத்தார்.   இந்த நிலையில் பிரபுதேவா நேற்று காலை திடீரென குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார். பத்திரிகை போட்டோ கிராபர்கள், டெலிவிஷன் கேமராமேன்கள் கண்ணில் படாமல் இருக்க காருக்குள்ளேயே பதுங்கி இருந்தார். பின்னர் குடும்பநல கோர்ட்டில் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று கோரி குடும்பநல கோர்ட்டு நீnullதிபதி பாண்டியன் முன்பு மனுதாக்கல் செய்தார். நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் நடிகர் பிரபுதேவா மற்றும் அவரது மனைவி ரம்லத் இருவரும் மனமொத்து பிரிவதாக நீதிபதியும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்த நீதிபதி பாண்டியன் வரும் 7 ம் தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்தார்.  எனவே வருகின்ற 7 ம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!