முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பங்கேற்க இருந்த விவசாயிகள் மாநாட்டிற்கு, மாயாவதி அரசு மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஜூலை - 4 - உத்தரபிரதேசத்தில் உள்ள பட்டாபரசூல் என்ற இடத்தில் காங்கிரஸ்  கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு நடத்த அனுமதி கேட்கப்பட்டது. இந்த மாநாட்டில் ராகுல்காந்தியும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாநாட்டிற்கு மாயாவதி அரசு அனுமதி மறுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டாபரசூல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பல அசம்பாவித நிகழ்வுகள் நடந்தன. பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இப்போதும் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையே இருந்துவருகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் பட்டாபரசூல் பகுதியில் விவசாயிகள் மாநாடு நடத்த காங்கிரஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த மாதம் 9 ம் தேதி இந்த மாநாட்டை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. உ.பி. அரசிடம் விவசாயிகள் மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு நிலையை காரணம் காட்டி அனுமதி அளிக்க மாயாவதி அரசு மறுத்துவிட்டது. பட்டாபரசூல் பகுதிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா நேரில் சென்று காங்கிரஸ் தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். அதன்பின் அவர் தெரிவிக்கையில், மாயாவதியின் காட்டு தர்பாரில் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. விவசாயிகளை, ஏழை, எளிய மக்களை மாயாவதி அரசு நீசத்தனமாக கொன்று குவித்துள்ளது. பெண்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியவில்லை. சமீபத்தில்கூட வயலுக்கு சென்ற ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டாபரசூல் பகுதியில் மாநாடு நடத்த  அனுமதி அளிப்பதில்லை என்பதில் மாயாவதி அரசு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் அந்த பகுதியை விடுத்து நொய்டா பகுதியில் மாநாடு நடத்த காங்கிரஸ் கோரிக்கை விடுத்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்