முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் பேட்டி

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 4 - தீவிரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தானின் மனப்போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமாராவ் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் இருநாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பயணிகள் மற்றும் வர்த்தக விசா வழங்குவதில் விதிமுறைகளை தளர்த்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும் இந்த பேச்சுவார்த்தையானது இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத இறுதியிலோ இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்க வழிவகுத்துள்ளது.
இந்தநிலையில் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு நிரூபமாராவ் விரிவான பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் தீவிரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தானின் மனப்போக்கில் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது என்றார். சமீபத்தில் இருநாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது தீவிரவாதம் விஷயத்தில் பாகிஸ்தானின் மனப்போக்கில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை இந்தியா சார்பாக கவனிக்கப்பட்டதா? அந்த மாற்றமானது ஆக்கப்பூர்வமானதா என்று கேட்டதற்கு மேற்கண்டவாறு நிரூபாமாராவ் பதில் அளித்தார். பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள அந்த மாற்றம் ஆக்கப்பூர்வமானதுதான் என்றும் ராவ் தெரிவித்தார். தீவிரவாதிகள் ஒடுக்கப்பட வேண்டும். அவர்கள் போலி கரன்சி நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விடுகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பிலேயே கூறப்பட்டது ஒரு நல்ல மாற்றம்தான். அதேசமயத்தில் தீவிரவாதிகளுடன் உள்ள தொடர்பு குறித்து வெளிப்படையாக பாகிஸ்தான் அதிகாரிகள் பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கக்கூடாது. மும்பை தாக்குதலுக்கு நான்தான் பொறுப்பு என்று அமெரிக்க கோர்ட்டில் டேரிட் ஹெட்லி கூறியதை பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீர் ஒப்புக்கொண்டாரா என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த ராவ், பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே உள்ள உறவு முறிக்கப்பட வேண்டும் என்று ராவ் பதில் அளித்தார்.
மும்பை தாக்குதலில் டேவிட் ஹெட்லி, ஐ.எஸ்.ஐ.க்கிடையே உள்ள தொடர்பு குறித்து பேச்சுவார்த்தையின்போது கூறினேன். இந்ததொடர்பு குறித்து திருப்திகரமான வகையில் பாகிஸ்தான் பதில் அளக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியா தாராளமாக நடந்துகொள்வதாக கூறப்படுவதை ராவ் மறுத்துவிட்டார். எதார்த்த நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பேச்சுவார்த்தையின்போது மும்பை தாக்குதல் மட்டுமல்லாது அமைதி, பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் ராவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்