முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் இடைத்தேர்தலில் தோல்வி அர்ஜூன்முண்டாவுடன்-நிதீன்கட்காரி ஆய்வு

புதன்கிழமை, 6 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ராஞ்சி,ஜூலை.- 7 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது குறித்து அந்த மாநில முதல்வர் அர்ஜூன் முண்டாவுடன் கட்சியின் தலைவர் நிதீன்கட்காரி ஆலோசனை நடத்தினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி அரசு உள்ளது. முதல்வராக அர்ஜூன் முண்டா இருக்கிறார். அந்த மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் லோக்சபை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா சார்பாக கோஸ்வாமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா (ஜே.வி.எம்-பி) சார்பாக அஜய் குமார் போட்டியிட்டார். தேர்தலில் அஜய்குமார் சுமார் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதனால் பாரதிய ஜனதா மேலிடம் பெரும் அதிர்ச்சி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணங்களை ஆய்வு செய்ய முதல்வர் அர்ஜூன்முண்டா, மாநில பா.ஜ.தலைவர் தினேஷானந்த் கோஸ்வாமி மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர் கோஸ்வாமி ஆகியோர்களை டெல்லி வரமாறு கட்சியின் அகில இந்திய தலைவர் நிதீன்கட்காரி அழைப்பு விடுத்திருந்தார். அதனையொட்டி நேற்று இவர்கள் 3 பேரும் டெல்லி சென்று நிதீன்கட்காரியை சந்தித்ததாக தெரிகிறது. அப்போது தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டதாகவும் அரசின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும்படி கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்