பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம்...!

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      இந்தியா
Petrol

 

புதுடெல்லி, மார்ச்.1 - மத்திய பட்ஜெட்டில் சுங்கவரி மற்றும் கலால் வரியை குறைக்காததால் பெட்ரொல் மற்றும் டீசல் விலை மேலும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமைந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10 தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால்தான் உள்நாட்டில் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படுகிறது என்று காரணம் கூறப்பட்டது. இந்தநிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் சுங்கவரி மற்றும் கலால் வரி குறைக்கப்படலாம். அதனால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று மக்கள் குறிப்பாக உபயோகிப்பாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு சுங்கவரி மற்றும் கலால் வரி குறைக்கப்படவில்லை. இதனால் உள்நாட்டில் பெட்ரோல்,டீசல் விலை மேலும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: