எடப்பாடி தொகுதியில் புதிய ரேசன் கடை அமைச்சர் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

எடப்பாடி,ஜூலை.- 11 - எடப்பாடியில் ஆலச்சம்பாளையம், காட்டூர் மற்றும் நாச்சியபாளையம் ஆகிய பகுதிகளில் புதிய ரேசன் கடைகளை தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் மகாபூசனம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இலியாஸ் பாஷா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேசன் கடையை திறந்து வைத்து அமைச்சர் பேசுகையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த போது ரேசன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமமப்பட்டதை அறிந்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது புதிய கடை திறக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: