சன் டி.டி.எச். நிறுவனத்தில் ரூ.600 கோடி முதலீடு செய்தது லஞ்சப் பணமே-ஜி.ராமகிருஷ்ணன்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 10 - ஊடகங்களின் மீது பழிபோட்டு ஊழலை மறைக்க முடியாது என்றும், மேலும் சன் டி.டி.எச். நிறுவனத்தின் துணை நிறுவனமான மாக்சியில் முதலீடு செய்த  ரூ.600 கோடி லஞ்சப் பணமே என்று சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத்துறை உச்சnullநீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையில், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலில் உலக சாதனை படைத்துவருகிறது. ஊழல் நடைபெறாத துறையே இல்லை என்றாகிவிட்டது. இதன் உச்சகட்டமாக வெளிவந்து தேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்.
உச்சநீnullதிமன்றத்தின் தலையீடு இல்லையென்றால் கறுப்புப்பண விவகாரம் உட்பட பல்வேறு ஊழல் விவகாரங்களை ஊத்தி மூடி இருப்பார்கள் காங்கிரசார். தயாநிதிமாறன் ராஜினாமா குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தி.மு.க. தலைவர், உலகில்​ குறிப்பாக இந்தியாவில்​ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்தி விட முடியும். அதற்கு தயாநிதிமாறன் விதிவிலக்கல்ல. இந்த விவகாரத்தில் தயாநிதிமாறனுக்கு தி.மு.க. துணையாக நிற்கும் என்று கூறியுள்ளார். ஊடகங்களின் மீது பழிபோட்டு ஊழல் குற்றச்சாட்டை மறைக்க​திசை திருப்ப​ தி.மு.க. தலைவர் முயல்கிறார். ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் தயாநிதிமாறன் ராஜிநாமா செய்யவில்லை. மாறாக உச்சநீnullதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடந்துவரும் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் தயாநிதிமாறன் பெயர் இடம்பெற்றிருப்பதால்தான் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
ஊடகங்கள் இதுகுறித்து, நீnullண்டகாலமாகவே செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அப்போதெல்லாம் தயாநிதிமாறன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை
இல்லையென்றால் அவர் ஏன் இப்போது ராஜினாமா செய்ய வேண்டும்.
ஐ.மு. கூட்டணி​1 அரசின் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதிமாறன் ஏர்செல் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததாக சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்
அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், ஒதுக்கீடு செய்யாமல் இரண்டாண்டு காலம் இழுத்தடித்த தயாநிதிமாறன் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்சி நிறுவனம் விலைக்கு வாங்கிய 30வது நாளில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தார் என்பது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து சன் குழுமத்தின் சன் டி.டி.எச். நிறுவனத்தில் மாக்சி துணை நிறுவனம் ரூ.600
கோடி மூதலீடு செய்துள்ளது.
அதாவது, 2​ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டீ நிறுவனம் கலைஞர்
தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கடன் கொடுத்ததைப் போலத்தான் இதுவும் நடந்துள்ளது.
ஆதாயம் பெற்றதன் அடிப்படையில் தரப்பட்ட லஞ்சமே இது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் தயாநிதி மாறன் ராஜிநாமா செய்ய நேர்ந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை இதுவரை தயாநிதிமாறன் ஆதாரப்nullர்வமாக மறுக்கவில்லை. தி.மு.க. தலைவரும் மறுக்கவில்லை.
திரைப்படத்துறை,தொலைக்காட்சித்துறை, பத்திரிகைத்துறை, பண்பலை வானொலி,கேபிள்
இணைப்பு என்று ஊடகத்தில் ஒரு துறை விடாமல் தமிழ்நநாட்டில் மட்டுமின்றி தென்மாநிலங்கள்
முழுவதும் ஆதிக்கம் செலுத்துவது சன் குழுமம் தான். இதற்கு போட்டியாக கிளம்பிய கலைஞர் தொலைக்காட்சியும் இதே போன்று தனது சாம்ராஜ்யத்தை விதரித்தது. குடும்ப சமரசத்திற்குப்பிறகு புகைச்சல் குறைந்தாலும் தனித்தனியாக தொழில் நடந்தது.
பெக்ட்ரம் முறைகேட்டில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார்,
தயாநிதிமாறன் என்று ஒவ்வொருவராக சிக்கும் நிலையில் ஒட்டுமொத்த பழியையும் ஊடகங்களின்
பக்கம் திருப்பிவிட தி.மு.க. தலைமை முயல்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பணப்பட்டுவாடாவை முழுமையாக செய்ய முடியாத நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோட்டது தி.மு.க. தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீதான அர்ச்சனை தொடர்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததை மறைக்க, துரத்தும் வழக்குகளிலிருந்து திசைதிருப்ப, ஊடகங்களை கைகாட்டுகிறார் கருணாநிதி.
சன் டி.வி. நிர்வாகி சக்சேனா மீது திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடுக்கப்பட்ட புகார் அல்ல. முந்தைய ஆட்சியின்போதே கொடுக்கப்பட்டு கண்டு கொள்ளப்படாத புகாரின் அடிப்படையில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர் நிறுவனத்தின் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிகின்றன. இதற்கெல்லாம் காரணம்
ஊடகமா? இல்லையே. அதிகாரம் கையில் இருந்தபோது செய்த அடாவடிகள் தானே காரணம்.
இப்போது தி.மு.க.வினர் மீது குவியும் நில மோசடி புகார்களுக்கு யார் காரணம்? ஊடகங்களா?
இல்லையே. ஆட்சியில் இருந்தபோது தி.மு.க.வினர் நடத்திய திருவிளையாடல்கள் தானே காரணம். முகம் காட்டும் கண்ணாடி மீது கல்லெறிந்து பயனில்லை. ஊடகங்களை குறை சொல்வதால் உண்மையை மறைத்துவிட முடியாது.
இவ்வாறு சி.பி.எம். மாநில செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: