முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளுந்தூர் பேட்டையில் ஜம்பொன் சிலைகள் கொள்ளை

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

விழுப்புரம், ஜூலை.12 - உளூந்தூர்பேட்டை உடையார் தெருவில் பழங்கால பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபால் என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல சாமிக்கு ராஜகோபால் பூஜை செய்தார். பின்னர் கோவில் கதவை பூட்டி விட்டு ராஜகோபால் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கோவிலை திறக்க ராஜகோபால் வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கோவில் கதவு திறந்து கிடந்தது. 

பதட்டத்துடன் அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது கருவறையில் இருந்த ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உள்பட ஜம்பொன்னிலான 6 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. 

அந்த சிலைகளின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சமாகும். கொள்ளை பற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் கோவிலுக்கு திரண்டு வந்தனர். 

கோவில் கொள்ளை குறித்து உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தடயவியல் நிருபுணர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர். 

நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்ம கும்பல் கோவில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்துக் கொண்டே சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை நடந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்