முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவு டெஸ்ட்: இஷாந்த் சர்மாவுக்கு 22 விக்கெட்டுகள்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

டொமினிக்கா, ஜூலை. 12 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 251 ரன் குவித்து முதலிடம் பெற்றார். பெளலிங்கில் இஷாந்த் சர்மா 22 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தை பிடித்தார். இது பற் றிய விபரம் வருமாறு - கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கும், கேப்டன் டே ரன் சம்மி தலைமையிலான மே.இ.தீவு அணிக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 

இதன் 3 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிக்கா தீவில் நேற்று முன் தினம் டிராவில் முடிந்தது. இறுதியில் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக நடந்த முதல் டெஸ் டில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவு டெஸ்ட் தொடரில் ரன் குவிப்பில் டிராவி ட் முதலிடத்தைப் பிடித்தார். 3 டெஸ்டில் அவர் 251 ரன் எடுத்தார். சராசரி 50.20 ஆகும். இதில் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 112 ரன் எடுத்தார். 

வி.வி. எஸ். லக்ஷ்மண் 243 ரன் எடுத்து 2 -வது இடத்தைப் பிடித்தார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 48.80 ஆகும். மே.இ.தீவு வீரர் சந்தர்பால் 241 ரன் எடுத்து 3 -வது இடத்தை பிடித்தார். ரெய்னா 232 ரன் னும், டாரன் பிராவோ 205 ரன்னும் எடுத்தனர். 

பந்து வீச்சில், இஷாந்த் சர்மா முத்திரை பதித்தார். 3 டெஸ்டில் அவர் 22 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தை பிடித்தார். 123.5 ஓவர் வீசி 371 ரன் கொடுத்து இந்த விக்கெட்டை எடுத்தார். 55 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்து பந்து வீச்சு ஆகும். 

மேற்கு இந்தியத் தீவு வேகப் பந்து வீரர் எட்வர்ட்ஸ் 19 விக்கெட் கைப் பற்றி 2 -வது இடத்தைப் பிடித்தார். 76 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப் பற்றியதே சிறந்த பந்து வீச்சு ஆகும். பிரவீன் குமார், பிஷூ தலா 12 விக்கெட் கைப்பற்றினார்கள். 

இந்த சுற்றுப் பயணத்தில் இந்திய அணி முன்னதாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் கேப்டன் ரெய் னா தலைமையிலான இந்திய அணி 3 - 2 என்ற கணக்கில் தொடரை  வென்றது. 

மே.இ.தீவு சுற்றுப் பயணத்தைப் பொறுத்தவரை இந்திய அணி ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றால் டெஸ்டில் கோட்டை விடும். டெ ஸ்டில் வெற்றி பெற்றால் ஒரு நாள் தொடரை இழந்து விடும். 

ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திய அணி இங்கு ஒரு நாள் மற் றும் டெ ஸ்ட் தொடரில் வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிற து. இந்திய அணி  3 - வது முறையாக இந்த சாதனையை புரிந்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்