முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் ரூ.2 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.13 - மதுரை கூடல்புதூரில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். மதுரை கூடல்புதூர் செல்லையாநகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் அனு (வயது19) கல்லூரி மாணவி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். 

அப்போது மதுரை ஆனையூர் அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் மகன் சுரேஷ் என்பவர் அனுவை கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் சுரேஷ், அந்தோணியின் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் தந்தால் மகளை விடுவிப்பேன் என்று கூறினார். இதையடுத்து அந்தோணிசாமி ரூ.1 லட்சம் பணத்தை சுரேசிடம் கொடுத்து மகளை மீட்டார். 

இந்நிலையில் சம்பவத்தன்று அனு மீண்டும் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தோணிசாமி மகளை அக்கம் பக்கம் தேடி பார்த்தபோது சுரேஷ்தான் மீண்டு மகளை கடத்தியது தெரிவந்தது. முன்புபோல சுரேஷ் அந்தோணிசாமிக்கு போன்செய்து ரூ.2 லட்சம் கொடுத்தால் மகளை விடுவிடுப்பதாக கூறினார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து அந்தோணிசாமி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். 

எனது மகளை ஆனையூர் அகதி முகாமை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடத்தி கொண்டு ரூ.2 லட்சம் கேட்டுமிரட்டுகிறார். இதற்கு உடந்தையாக அவரது தந்தை சிவலிங்கம், தாய் லட்சுமி மற்றும் உறவினர் கந்தன் ஆகியோர் உள்ளனர். எனவே மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony