முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற்பட்டோருக்கான விடுதிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - சென்னையிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் 11.7.11 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பராமரிப்பு பணிகள் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர், உத்தரவிற்கு இணங்க பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மத் ஜான் சென்னையிலுள்ள லேடி வெலிங்டன் கல்லூரி மாணவியர் 1 மற்றும் 2 விடுதிகளை ஆய்வு மேற்கொண்டபோது மாணவியர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கூடுதலாக தேவைப்படும் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் தேவைகளை அமைத்துக் கொடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் மாணவியர்கள் சாப்பிடும் உணவின்  தரத்தை அறிய உணவினை சாப்பிட்டு பார்த்தார்.

அதன்பிறகு சைதாப்பேட்டையிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதியினை ஆய்வு செய்தார். அப்போது கழிவறைகள் மற்றும் திறந்தவெளி பகுதிகளை சுகாதாரமாக அமைக்க உத்தரவிட்டார். பாதுகாப்பாற்ற நிலையிலுள்ள மின் சாதனங்களை மாணவர்களின் பாதுகாப்புக்கருதி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாணவர்கள் ஓய்வு நேரத்தை பயன் உள்ளதாக அமைத்துக் கொள்ள அறிவுரைகள் கூறினார்.

அதன்பின்னர், கிண்டியிலுள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி மாணவர் விடுதியினை ஆய்வு செய்தார். இந்த விடுதி கடந்த ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் மேற்கூரை கட்டப்பட்டுள்ளதால், மாணவர்களின் நலன் கருதி உடனடியாக அவைகள் சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் இவ்விடுதிக்கு சுற்றுசுவர் அமைக்கவும், மழைக்காலங்களில் குடிநீர் தொட்டியில் கழிவு கலந்து விடுவதால், தொட்டியின் உயரத்தை உயர்த்தி கட்டவும், கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கொசுத்தொல்லைகளிலிருந்து விடுபடவும், உரிய நேரத்தில் அட்டவணைப்படி உணவு வழங்கவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பிற்பட்டோர் நலத்துறை இயக்குனர் ஜெ.சந்திரகுமார், சென்னை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் கோவிந்தசாமி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்