முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் வேலை நிறுத்தம் - வாழ்க்கை பாதிப்பு

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஜூலை.14 - காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று பிரிவினைவாதிகள் நடத்திய பொது வேலைநிறுத்ததால் மக்களின் மாமூல் வாழ்க்கை அடியோடு பாதித்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களான ஹூரியத் மாநாடு, மற்றும் இதர பிரிவினைவாத இயக்கங்கள் ஒன்று சேர்ந்து நேற்று பொது வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தன. மேலும் ஸ்ரீநகரில் பேரணியும் நடத்தப்படும் என்று றிவித்திருந்தன. பொது வேலைநிறுத்தத்தையொட்டி தலைநகர் ஸ்ரீநகரில் ஆள் நடமாட்டமே இல்லாமல் காணப்பட்டது. பாதுகாப்பு படையினரும் போலீசாருமே பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஸ்ரீநகரிலும் அதன் புறப்பகுதிகளிலும் வங்கிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன. சாலைகளில் போக்குவரத்து இல்லை. அவைகள் வெறிச்சோடி கிடந்தன. வீரர்கள் நினைவு தினத்தையொட்டி காஷ்மீரில் நேற்று பொதுவிடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. ஸ்ரீநகர் மட்டுமல்லாது வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள பாரமுல்லா உள்பட பல முக்கிய நகரங்களிலும் மாமூல் வாழ்க்கை அடியோடு பாதித்தது. பொது வேலைநிறுதத்தையொட்டி பாதுகாப்புக்கு கூடுதல் படையினர் அமர்த்தப்பட்டிருந்தனர். காஷ்மீரின் தென் பகுதியிலும் மாமூல் வாழ்க்கை அடியோடு பாதித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்