முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவி ஏற்ற மறுநாளே சர்ச்சையில் மந்திரி

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை14 - மத்திய ரயில்வே அமைச்சராக பதவி ஏற்றுள்ள தினேஷ் திரிவேதி பதவி ஏற்ற மறுநாளே பெரும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் இந்த சர்சைக்காக பெரும் வருத்தத்தையும் தெரிவித்தார். மத்திய அமைச்சரவை நேற்றுமுன்தினம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி ரயில்வே அமைச்சராக பதவி ஏற்றார். பதவி ஏற்ற பின்பு நேற்று பதேபூர் மருத்துவமனைக்கு சென்று கல்கா ரயில் விபத்தில் காயம டைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் காயம் அடைந்தவர்களிடம் விபத்து நடப்பது சகஜம்தான். அதை தாங்கிக்கொள்ள மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இதனால் காயம் அடைந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் கோபம் அடைந்தனர். அமைச்சர் தினேஷ் திரிவேதியை சூழ்ந்துகொண்டனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. தன்னுடைய தவறை உணர்ந்த அமைச்சர் தினேஷ் திரிவேதி வருத்தம் தெரிவித்தார். காயம் அடைந்தவர்களை பார்த்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த திரிவேதி, ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சை அளிப்பதை அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள் என்றார். விபத்தில்  பலியானவர்களின் குடும்பத்தார்களுக்கு ரயில்வேயில் வேலை கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கல்கா ரயில் விபத்துக்குள்ளானதில் 80 பேர் பலியானார்கள் மற்றும் 250 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் கான்பூர், பதேபூர் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்