முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காப்பீட்டு திட்டத்திற்கு மக்கள் வரவேற்பு

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூலை.16 - தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மருத்துவ காப்பீட்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பளித்துள்ளனர். அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் முழுமையான புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார். இந்த புதிய காப்பீட்டு திட்டம் மூலம் நான்கு வருடங்களில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக ரூ. 4 லட்சத்திற்கான மருத்துவ செலவினை பெற இயலும். மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான முறைகளையும் சேர்த்து மொத்தம் 980 வகையான சிகிச்சை முறைகள் இதன் மூலம் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இதனிடையே தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தனியார் நில அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை குறித்த புகார்கள் குறித்து விசாரிக்க தனியாக சிறப்பு பிரிவை காவல் துறையில் ஏற்படுத்த ஆணை பிறப்பித்த முதல்வருக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்