முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ரயில் நிலையத்தில் 56 கண்காணிப்பு கேமிராக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.17 - மதுரை ரயில் நிலையத்தில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் 56 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளன என்று மதுரை கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது, மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாகவும், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாகவும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதன்படி ரூ. 4.50 கோடி மதிப்பில் ரயில் நிலைய நுழைவு வாயில், பிளாட்பாரங்கள், வாகன காப்பகம், சரக்கு வைக்கும் இடம், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட 56 இடங்களில் இந்த வகையான காமிராக்கள் பொருத்தப்படவுள்ளன. 

இதற்காக ரயில் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்பணி வரும் டிசம்பருக்குள் முடிவுற்று ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதுரை ரயில் நிலையத்தை முன்மாதிரி ரயில் நிலையமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி ரயில்வே நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள், பயணிகள் வசதிக்காக எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள், பிளாட்பாரங்களை நவீனப்படுத்தும் பணிகள், ரயில் பெட்டிகளை பராமரிக்கும் யார்டு மையத்தை மாற்றுவது தொடர்பான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த பணிகள் நிறைவு பெற்றால் மதுரை ரயில் நிலையம் முன்மாதிரியான நிலையமாக திகழும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்