முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு விவகாரம் - நடிகைக்கு கோர்ட் நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பதனம் திட்டா,ஜூலை.17 - சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற விவகாரம் தொடர்பாக அக்டோபர் 18 ம் தேதி ஆஜராகும்படி நடிகை ஜெயமாலாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் தனது இளம் வயதில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றதாகவும், அங்கு சாமி சிலையை தொட்டு வணங்கியதாகவும் நடிகை ஜெயமாலா தெரிவித்தார். இதையடுத்து ஜெயமாலா மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெயமாலாவுடன் சேர்ந்து ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், ஜெயமாலாவின் உதவியாளர் ரகுபதி ஆகியோர் கோயிலின் புனிதத்துக்கு இழுக்கு ஏற்படுத்த சதி செய்து செய்தி பரப்பி உள்ளனர் என புகாரில் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயமாலா, உன்னிகிருஷ்ணன், ரகுபதி ஆகியோர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஜெயமாலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி ஜெயமாலாவின் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 18 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜெயமாலா உள்பட 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago