சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு - விவசாயிகள் சங்கம்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      தமிழகம்
Farmer 0

 

ஈரோடு,மார்ச் - .2- தமிழக விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் ஈரோட்டில் அதன் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், மாநில பொருளாளர் வேலுச்சாமி, ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு பின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தொடர் மின்வெட்டு, காவேரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர் உரிமைகளை பாதுகாக்க தவறியதுதான் விவசாயிகளால் எண்ணப்படுகிறது. வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து இந்த அரசு கவலைப்படவே இல்லை. சாய கழிவு நீரால் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை மதித்துக் கூட இந்த அரசு அமுல்படுத்தவில்லை. மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் விவசாயிகளை சேர்க்காமல் இந்த அரசு புறக்கணித்து விட்டது. 

இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் விவசாயிகள் கடன் பெற  முடியாத நிலை உள்ளது. 2 லட்சம் விவசாய குடும்பங்களை பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசுக்கு எதிராக வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதிரிப்பது என இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: