முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. கிராம சுகாதார திட்டத்தில் ரூ.3700 கோடி ஊழல்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

லக்னோ, ஜூலை.21 - உ.பி. மாநிலத்தில் கிராம சுகாதார திட்டத்தில் ரூ.3700 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்திற்கு கிராம சுகாதாரத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.8ஆயிரத்து 600 கோடி நிதி வழங்கியது. இதில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.7ஆயிரத்து 450 கோடி செலவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மே மாதம் உயர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3ஆயிரத்து 700 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கபபட்டுள்ளது. இந்த மெகா ஊழல் குறித்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது கிராம சுகாதாரத்திட்ட ஊழல் விவகாரத்தில் மாநில அரசு இதுவரை ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை என்று கேள்வி எழுப்பியது. பின்னர் இந்த வழக்கு விசாரணை 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்