முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் கோயில் பாதையில் வெடிகுண்டா? பக்தர்கள் பீதி

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஜூலை.22 - அமர்நாத் குகைக்கோயிலுக்கு செல்லும் பாதையில் நேற்றுக்காலையில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு பொருள் கிடந்தது. இது தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டாக இருக்கமோ என்ற பீதி பக்தர்களிடையே நிலவியது. அமர்நாத் குகைக்கோயிலுக்கு ஜம்மு மற்றும் பஹல்காம் ஆகிய வழிகள் மூலமாக பக்தர்கள் சென்று வருகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப்பகுதியில் குகைக்கோயில் இருப்பதால் பக்தர்களை தீவிரவாதிகள் தாக்கலாம் என்ற அச்சம் இருக்கிறது. இதனையொட்டி பக்தர்களுக்கு மூன்றடக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமர்நாத் குகைக்கோயிலுக்கு செல்லும் பஹல்காம் வழியில் ஷெசாங் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு பொருள் கிடந்தது. அதுவும் பக்தர்கள் தங்கியிருந்த முகாமிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமையொட்டி அந்த பொருள் கிடந்தது. உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர். அந்த பொருளை எடுத்து சோதித்து பார்த்தில் அதில் வெடிமருந்து பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையொட்டி பக்தர்கள் வழக்கமாக யாத்திரையை தொடங்கினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony