முக்கிய செய்திகள்

ராசா-பல்வாவிடம் வருமானவரித் துறை விசாரணை

Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை. 23 - அலை வரிசை ஊழல் விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, ஷாகித் உஸ் மான் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்டோரிடம் வருமான வரி த் துறை அதிகாரிகள் இம்மாதம் 27 -ம் தேதியிலிருந்து 29 -ம் தேதி வரை விசாரணை நடத்துகிறார்கள். 

அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழ க்கு பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில், உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிம ன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இது வரை 2 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும், விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. 

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 -வது குற்றப் பத்திரி கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் யு.யு. லலித் ஆஜராகி வாதாடினார். 

அலை வரிசை ஊழல் விவகாரம் தொடர்பாக மேற்படி நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வருமான வரித் துறை அதிகாரிக ள் சார்பில், அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டது. 

இதையடுத்து இம்மாதம் 27 -ம் தேதியிலிருந்து 29 -ம் தேதி வரை தொ டர்ந்து 3 நாட்கள் ஆ.ராசா, பல்வா, கோயங்கா உள்ளிட்ட 6 பேரிட மும் வருமான வரித் துறை அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்துவார்கள். 

அவர்களது வருமானம் எவ்வளவு? வருமானத்துக்கு அதிகமாக சொத் து சேர்த்தது எப்படி? என்றெல்லாம் அவர்கள் விசாரணை நடத்த இரு க்கிறார்கள். இது, அலை வரிசை ஊழல் வழக்கில் திருப்பத்தை ஏற்படு த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: