முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்திற்கு எதிரான 2 -வது டெஸ்ட் வெற்றி பெறுவதே இலக்கு கேப்டன் தோனி பேட்டி

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

நாட்டிங்ஹாம், ஜூலை. - 30  - இங்கிலாந்திற்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும்  2 - வ து டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதே இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் நகரில் உள்ள டிரன்ட் பிரிட்ஜ் மைதா  னத்தில் நேற்று துவங்கியது. கடந்த வாரம் லார்ட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 193 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இத னால் இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணிக் கேப்டன் தோனி நிருப ர்களிடம் கூறியதாவது - ஜாஹிர்கான் அணியில் இருப்பது அணிக்கு எப்போதுமே சிறந்தது. ஏனென்றால் அவர் அனுபவம் வாய்ந்த பெள லர். 

குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் அவரது பந்து வீச்சு சிறப்பா க இருக்கும். 2007 -ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி ய போது, அவரது பந்து வீச்சு உண்மையிலேயே மிகவும் அபாரமாக இருந்தது. 

இந்த டெஸ்டில், ஜாஹிர்கான் ஆடவில்லை. அவர் இல்லாதது சிறிது ஏமாற்றமே. 3 -வது டெஸ்டில் விளையாட அவர் உடல் தகுதி பெறு வார் என்று எதிர்பார்க்கிறோம். 

ஜாஹிர்கான் இல்லாத இடத்தில் மற்ற பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கான் இல்லாவிட்டாலும் எங்களது இலக்கு வெற்றி பெறுவது தான். வெற் றி என்ற மனநிலையில் விளையாடுவோம். 

கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து எழுச்சி பெறுவது கடினம் என்றாலும் சிறப்பாக விளையாடுவோம். இவ்வாறு தோனி கூறினார். 

லண்டனில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்ட் போட்டி பலவகையில் முக்கியம் வாய்ந்ததாகு ம். இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த வாரம் லார்ட்சில் நடந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் 2,000 -வது டெஸ்ட் போட்டியாகும். தவிர, இந்தியா மற்றும் இங்கி லாந்து அணிகளுக்கு இடையேயான 100 -வது டெஸ்டாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்