முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.5 - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கின்றன. இதனால் வங்கிச் சேவைகள் இன்று பெருமளவில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுடைமை வங்கிகளை தனியார் மயம் ஆக்கக்கூடாது, பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது, வங்கிகளை இணைக்கக்கூடாது, வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார், அயல்நாட்டு வங்கிகள் அனைத்தும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள இருப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய பேரவை அமைப்பாளர் சியாமல் கர்மகார்  கூறியுள்ளார். 

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இந்த வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என்றும் அவர் கூறினார். தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கிகளின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக இன்று நாடு முழுவதும் இன்று வங்கிச் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்