முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகனாகுளம் கண்மாயில் சுற்றுலா படகு சவாரி ஆரம்பம்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.7 - மதுரை நாகனாகுளம் கண்மாயில் படகு சவாரியை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேற்று துவக்கிவைத்தார். மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட நாகனாகுளம் கண்மாயில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி துவக்கவிழா மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு சுற்றுலா படகு சவாரியை துவக்கி வைத்து அதே படகில் சவாரி செய்தார். அமைச்சருடன் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், எம். முத்துராமலிங்கம், கே.தமிழரசன், மாநகராட்சி அ.தி.மு.க. குழுத்தலைவர் பெ.சாலைமுத்து, மதுரை மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவரும் கிழக்குத்தொகுதி செயலாளருமான எம். இளங்கோவன் ஆகியோரும் பயணம் செய்தனர். 

பின்னர் அதே நாகனாகுளத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதியோர் உதவித்தொகை மற்றும் நலிந்தோர் உதவித்தொகையாக 171 பயனாளிகளுக்கு ரூ.1.71 லட்சமும் நலிவடைந்த 39 கலைஞர்களுக்கு ரூ.3.12 லட்சமும் மகப்பேறு மற்றும் இயற்கை மரண உதவியாக 50 பேருக்கு ரூ.4.97,200-ம் ஆக மொத்தம் 260 பயனாளிக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்டத் உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். 

இந்நிகழ்ச்சிகளில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மதுரை புறநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்,  மதுரை மாநகர் அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ். முத்துராமலிங்கம், பகுதிகழக செயலாளர்கள் எம்.என். முருகன், கே.ஜெயவேல், தளபதி ஆர். மாரியப்பன், பி.எஸ். கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் விளாங்குடி திரவியம், பரவை ராஜா, எம்.என்.கோவிந்தராஜன், பரமேஸ்வரன், புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ். முருகன், வக்கீல் கோபி, அய்யர் பங்களா கருப்பணன், வட்டச்செயலாளர் பால்பாண்டி, இளைஞரணி பகுதி செயலாளர் முத்து இருளாண்டி, வட்டச்செயலாளர்கள் கே.கண்ணன், கே.வி.கண்ணன், எ.முத்துசாமி, எஸ்.போஸ், சக்திவிநாயகர் பாண்டியன், மற்றும் செல்லூர் பாலமுருகன், சமத்துவ மக்கள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்