முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு காலாவதி: தங்கபாலு

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு எதுவும் தற்போது செயல்படுவது இல்லை. ஆகவே போட்டி காங்கிரஸ் பொதுக்குழுவை யாரும் கூட்ட முடியாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கூறினார். 

சோனியா காந்திக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சோனியா உடல்நலம் பெற வேண்டும் என்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மவுண்ட்ரோடு தர்கா, சாந்தோம் தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. 

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த தங்கபாலு கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். அகில இந்திய தலைமை தான் வேறு தலைவரை நியமிக்க வேண்டும். அதுவரை நான் தான் தலைவர். வேறு யாரும் தலைவரல்ல. நான் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். 

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க கூடிய அதிகாரம் அகில இந்திய தலைமைக்குதான் உண்டு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தி.மு.க.தான் காங்கிரசோடு உள்ளது என்று கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சிக்கு நான் தான் தலைவர், அவர் தலைவர் அல்ல. நான் தான் கூட்டணி பற்றி கூற வேண்டும். அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவை நான் அறிவிப்பேன். 

காங்கிரஸ் கட்சியில் போட்டி பொதுக்குழு யாரும் கூட்ட முடியாது. என் அனுமதியின்றி யாரும் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய முடியாது. ஆகஸ்ட் 9-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்படும். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் அன்று வர வேண்டும்.  

காங்கிரசுக்கு என்று பொதுக்குழு எதுவும் தற்போது செயல்படவில்லை. செயல்படாத பொதுக்குழுவை கூட்ட யாருக்கும் அதிகாரம் இல்லை. காங்கிரசில் இருந்து 3 பேரை நீக்க எனக்கு அதிகாரம் உண்டு. நீக்கப்பட்ட ஜி.ஏ.வடிவேலு, இதாயதுல்லா உட்பட போட்டியாக இருப்பவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய கூடாது. 

இவ்வாறு தங்கபாலு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்