முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் புயல் அபாயம்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,ஆக.9 - சீனாவில் புயல் அபாயம் காரணமாக 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 8 புயல்கள் சீனாவை தாக்கியுள்ளன. இந்த நிலையில் மியூபா என்ற 9 -வது புயல் உருவாகி மிரட்டி வருகிறது. இது ஷிஜியாங் மாகாணத்தை தாக்கும் அபாயம் உள்ளது. 

 இதனால் ஷிஜியாங் மாகாணத்தில் தாழ்வான இடங்களில் தங்கி இருக்கும் 2  லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.  அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஷிஜியாங் மாகாணத்தின் கம்யூனிஸ்டு கட்சியின் கமிட்டி தலைவர்  தெரிவித்துள்ளார். 

மேலும் ஷிஜியாங் மாகாணத்தில் கடற்கரை சுற்றுலா நகரங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் படகுகள் மீன்பிடிதுறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக குயன்ஷான் அணுமின் நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சீனாவின் 10 மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்