முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், ஆக 11 - திருச்செந்தூர் தொகுதி முன்னாள் திமுக எம்.ஏல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.தமிழகம் முழுவதும் கடந்த திமுக ஆட்சியில் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள், அடாவடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதாராதாகிருஷ்ணன் தூத்துக்குடி கந்தன் காலனியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.ஸ்டீபன் சேசுபாலன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து அனிதாராதாகிருஷ்ணனிடம், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. நரேந்திரன் நாயர் விசாரித்தார். 

 ஆறுமுகநேரி கிருஷ்ணன் மகன் சுரேஷ் (வயது 40) நகர திமுக செயலாளர்.இவர் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் ஆதரவாளர். கடந்த மார்ச் 1 ந் தேதி இவரை கொலை செய்ய அனிதாராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் 5 பேர் கொண்ட கும்பல் தன்னை கொலை செய்யவந்ததாக சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். மேலும் மணல்குவாரி பிரச்சனை, ஸ்ரீவைகுண்டத்தில் நிலமோசடி வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!