திருப்பரங்குன்றம் கோவில்களில் அருள் பாலித்த சிவபெருமான்

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      ஆன்மிகம்
Tpk Kumar

 

திருப்பரங்குன்றம்,மார்ச்.4 - திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் விடிய விடிய மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டது. பால்சுனை கொண்ட சிவபெருமானுக்கு 24 ஆயிரத்து 100 ருத்ராட்சங்களால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார். 

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவர் சத்தியகிரீஸ்வரர், கோவார்த்தனாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து நான்கு கால புஜைகள் நடந்தன. சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர், மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் ஆகியோருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 

திருநகரில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ள காசி விஸ்வநாதருக்கு 5 கால யாகசாலை பூஜைகள் முடித்து வெள்ளி ராஜாபணம் சாத்துப்படியாகி அருள் பாலித்தார். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து 24 ஆயிரத்து 100 ருத்ராட்சங்கள் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: