முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம்: விரைவில் நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக்.12 - சுங்கச்சாவடிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது விசாரித்து விரைவில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.தமிழக அரசின் 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 4-வது நாளாக நேற்று தொடர்ந்தது. இதில் கலந்து கொண்டு இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேசும்போது, சுங்கச்சாவடிகளில் தனியார் கம்பெனிகள் ஏலம் எடுத்ததில் சுங்கச்சாவடிகளில் தினசரி வாகனங்களுக்கு கடுமையான வசூல் செய்யப்படுகிறது என்று கூறினார். அப்போது, குறுக்கிட்டு பேசிய போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-

உறுப்பினர் பேசும்போது கூடுதலாக வரி விதிப்பது பற்றி குறிப்பிட்டார். பேருந்து லாரி உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து பேச உள்ளனர். 4500 கி.மீ சாலைகளை கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்ததன் விளைவுதான் அது.

1 நாளைக்கு 1 முறை வசூல் என்பதை மாற்றி ஒவ்வொருமுறை வாகனம் போகும்போதும் வசூலிப்பது என்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு செந்தில்பாலாஜி கூறினார்.

இதேபோல் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் உள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா குறிப்பிட்டபோது குறுக்கிட்டு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆட்சியில் சாலை விபத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் சாலை விபத்தை தடுக்கும் பொருட்டு அடையாள குறியீடுகள் இடவும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும் ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago