முக்கிய செய்திகள்

ஆ.ராசாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      ஊழல்
A-Raja1

 

புதுடெல்லி,மார்ச்.4 - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து திகார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ள ஆ.ராசா மற்றும் பால்வா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சி.பி. ஐ. காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ரூ. 3 ஆயிரம் கோடி அளவுக்கு ராசா லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அதில் ஒரு பகுதியை மொரிஷீயஸ் போன்ற நாடுகளில் அவரது மனைவி வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அவைகளை ராசா மறைப்பதாகவும் சி.பி.ஐ.கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ராசாவிடம் 14 நாட்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையொட்டி ராசாவிடம் சி.பி.ஐ.கோர்ட்டு நீதிபதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்பு மேலும் ராசாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். இதனயொட்டி அவர் திகார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: