முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் கொழும்பில் இன்று பலப்பரிட்சை

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். - 5 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பு நகரில் நடைபெற இருக்கும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத ஆயத்தமாக உள்ளன. முக்கிய ஆட்டத்தில் ஒன்றான இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை போட்டியின் 20 - வது ஆட்டம் இன்று இலங்கையி ன்  தலைநகரான கொழும்பு நகரில் இன்று நடக்கிறது. இலங்கை மற் றும் ஆஸ்திரேலிய அணிகள் இதில் மோதுகின்றன. போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது. 

ஆஸ்திரேலியாவிற்கு இது 3 -வது போட்டியாகும். ஆஸ்திரேலியா ஏற் கனவே ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மோதி உள்ளது. இரு போட்டிகளிலுமே ஆஸி. வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்றால் ஆஸி. க்கு இது 3 -வது வெற்றியாக இருக்கும். இலங்கைக்கு இது 4 -வ து போட்டியாகும். கனடா, கென்யா ஆகிய நாடுகளுடன் நடந்த         போட்டியில் இலங்கை வென்றுள்ளது. 

ஆனால் இலங்கை அணி பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் தோல் வியைச் சந்தித்தது நினைவு கூறத்தக்கது. ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணியாகும். உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் அணியாகும். 

எனவே சாம்பியனான ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டுமானால் இலங்கை அணி கடுமையாக போராட வேண்டும். இதற்காக புதிய வியூகத்துடன் களம் இறங்கினால் தான் வெற்றியைப் பற்றி நினைக்க முடியும். 

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா இந்தத் தொடரில் நன்கு பந்து வீசி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் மலிங்கா ஹாட்ரிக் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

அதே நேரம் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. எனவே இந்த லீக்கில் இலங்கை வெற்றி பெறுவது மலிங்காவின் கையில்தான் உள்ளது. அவர் சிறப்பாக பந்து வீச வேண்டும். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19 -ம் தேதி துவ ங்கியது. இந்தப் போட்டி அடுத்த மாதம் 2 -ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியை கோடிக் கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். 

உலகக் கோப்பையில் சாம்பியன்  பட்டத்தைக் கைப்பற்ற 12 அணிகள் களத்தில் குதித்துள்ளன. தற்போது முதல் கட்ட லீக் போட்டிகள் நடந் து வருகிறது. இதனைத் தொடர்ந்து காலிறுதி, அரை இறுதி மற்றும் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago