முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் பாடத் திட்டம்: காலாண்டு தேர்வு அட்டவணை

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.19 - சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் படி காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் 22 ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 

நடப்பு கல்வியாண்டிற்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. காலாண்டு தேர்வுக்கு இருக்க கூடிய கால அளவை கருத்தில் கொண்டு பாட பகுதிகள் குறைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் காலாண்டு தேர்வுகள் வழக்கமாக நடைபெறும் காலத்தில் இருந்து நீட்டித்து ஒரு வார காலத்திற்கு பின்னர் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி 22.9.11 அன்று துவங்கும் காலாண்டு தேர்வுக்கான பாடப் பகுதிகள்:

5 ம் வகுப்பு: தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, கணிதம்: ஒன்று முதல் நான்கு வரை, அறிவியல்: இயல் ஒன்று முதல் மூன்று வரை. 

6 ம் வகுப்பு: தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, கணிதம்: இயல் 1,2,3,10, அறிவியல்: இயல் 1 மட்டும், வேதியியல்: இயல் 2 மட்டும், உயிரியல்: இயல் 2 மட்டும், வரலாறு: இயல் 2 மட்டும், புவியியல்: இயல் 2 மட்டும். 

7 ம் வகுப்பு: தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, ஆங்கிலம்: இயல் ஒன்று மற்உறம் இரண்டு, கணிதம்: இயல் 1, 5.1 மட்டும், 6.1 மட்டும், அறிவியல்: வேதியியல்: இயல் 9 மட்டும், உயிரியல்: இயல் 1 மட்டும், சமூக அறிவியல்: குடிமையியல்: இயல் 1 மட்டும், வரலாறு: இயல் 1 மட்டும், புவியியல்: இயல் 1 மட்டும். 

8 ம் வகுப்பு: தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, கணிதம்: இயல் 1, 5.1, 5.2,6.1,6.2 மட்டும், அறிவியல்: இயற்பியல்: 12 மட்டும், வேதியியல்: இயல் 9 மட்டும், உயிரியல்: இயல் 1 மட்டும், சமூக அறிவியல்: குடிமையியல்: இயல் 1 மட்டும், வரலாறு: இயல் 1 மற்றும் 2 மட்டும், புவியியல்: இயல் 1 மற்றும் 2 மட்டும். 

9 ம் வகுப்பு: தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு. ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, கணிதம்: இயல் 1,23,4.1 முதல் 4.5 வரை, 7.1, 9.1, 10.1 மட்டும், அறிவியல்: இயற்பியல்: இயல் 14 மட்டும், வேதியியல்: இயல் 9,10 மட்டும், உயிரியல்: இயல் 1,2 மட்டும், சமூக அறிவியல்: குடிமையியல்: இயல் 1 மட்டும், வரலாறு: இயல் 1 மட்டும், புவியியல்: இயல் 1,2 மட்டும், பொருளியல்: இயல் 1 மட்டும். 

10 ம் வகுப்பு: தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு, கணிதம்: இயல் 1 முதல் 2.5 வரை, இயல் 4.1 முதல் 4.7 வரை, இயல் 5.1 முதல் 5.5. வரை, இயல் 6.1 மட்டும், இயல் 9.1, 9.2, 9.3 மட்டும், இயல் 10.1, 10.2 மட்டும். அறிவியல்: இயற்பியல்: இயல் 14,15 மட்டும், வேதியியல்: இயல் 9, 10 மட்டும், உயிரியல்: இயல் 1,2 மட்டும், சமூக அறிவியல்: குடிமையியல்: 1,2 மட்டும், வரலாறு:  இயல் 1,2 மட்டும், புவியியல்: இயல் 1,2 மட்டும், பொருளியல்: இயல் 1 மட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony