எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.19 - எந்த திட்டமாக இருந்தாலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து விரிவாக ஆய்வு செய்து அதன் பின்னர் அறிவிப்புக்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். ஆகவே 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தபடி மின்வெட்டு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், மின்சாரத்துறை மானியக்கோரிக்கை மீது அளித்த பதிலுரை வருமாறு:
தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சட்டப்படி, 1.தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 2.தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம், என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
2006-ல் ஜெயலலிதா ஆட்சியில் மின் உற்பத்தி நிறுவு திறன் 10,031 மெகாவாட். 2001 முதல் 2006 முடிய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் 2047 மெகாவாட்ஸ். அப்போது தமிழகம் மின்சார மிகை உற்பத்தி மாநிலமாக திகழ்ந்தது. அண்டை மாநிலங்களுக்கும் மின்சாரம் விற்பனை செய்ப்பட்டது. தற்போதைய மின் உற்பத்தி நிலை 10,237 மெகாவாட்.
தி.மு.க ஆட்சிக்காலத்தில் கூடுதலாக மின் உற்பத்தி திறன் கிடைத்தது 206 மெகாவாட் மட்டுமே. தேவைக்கேற்ப கூடுதலாக உற்பத்தி திறன் கிடைக்க வழிவகை செய்யவில்லை. 10,237 மெகாவாட்டில் மத்திய தொகுப்பில் கிடைப்பது 2,000 மெகாவாட் மட்டுமே.
தனியார் மின் உற்பத்தியில் 600 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. தற்போது 8000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாக மின் தேவை 10,500 மெகாவாட் முதல் 11,500 மெகாவாட் தேவைப்படுகிறது. பற்றாக்குறை 2500 முதல் 3500 மெகாவாட் ஆகும்.
கடந்த 2006 ஆம் ஆண்டுமுதல் மின் தேவை ஆண்டொன்றுக்கு 8 சதவீதம் அளவில் அதிகரித்தது. ஆனால் இவ்வளர்ச்சியை ஈடுகட்டும் அளவிற்கு மின் உற்பத்தி திட்டங்கள் இல்லை. மாநிலத்தின் அதிகரித்து வந்த மின் தேவையை பூர்த்தி செய்ய குறிக்கோளுடன் மிகப்பெரிய அளவிலான புதிய மின் திட்டங்களை மேற்கொள்ளவும், இதுவரை தொடங்கப்படாத மின் திட்டங்களை செயல்படுத்தவும், மற்றும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களை விரைவாக நிறைவு செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மின் தேவை, மின் உற்பத்திக்கும் உள்ள இடைவெளியினை சரிசெய்யவும், இந்த இடைவெளியை சரிசெய்து மின்சார பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதுவரை 3 மாதங்களுக்குள் நான்கு முறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, இந்த துறைக்கு நல்லதொரு வழிகாட்டு விதிமுறைகலையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
மின்வெட்டை படிப்படியாக குறைப்பதற்கு முதற்கட்டமாக உடனடி தேவையாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி 90 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
1.7.11 முதல் நகர் மற்றும் ஊரக பகுதிகளுக்கு (சென்னை தவிர) 3 மணிநேரம் மின் தடை 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 8.8.11 முதல் செப்.2011 வரை காற்றாலை உபரி மின்சாரத்தை பயன்படுத்தும் பொருட்டு இசைவு தெரிவிக்கும் உயர் அழுத்த மின் பயனீட்டாளர்கலுக்கு இரவு 10.00 மணிமுதல் மறுநாள் காலை 5.00 மணிவரை 20 விழுக்காடு மின் வெட்டு தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும்.
9.1.10 முதல் மூடப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின் நிலையம் -2 (92.2 மெகாவாட்) மீண்டும் 17.5.11 அன்று இயக்கிவைக்கப்பட்டது. 17.7.10 முதல் மூடப்பட்டிருந்த குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தில் (101 மெகாவாட்) பாரத மிகுமின் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட புதிய எரிவாயு நிலைப்பான் மாற்றப்பட்டு 28.5.11-ல் மீண்டும் இயக்கிவைக்கப்பட்டது.
காரே பெல்மா செக்டர்-11 நிலக்கரி பகுதியிலிருந்து நிலக்கரியை எடுப்பதற்கும் மற்றும் சுரங்க வளாக அனல் மின் நிலையம் அமைப்பதற்கும் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. 400 கி.வோட் சுங்குவார்சத்திரம் துணை மின்நிலையம் அதனை சார்ந்த மின்னூட்டியையும் ரூ.227.35 கோடி செலவில் 16.8.11 அன்று ஜெயலலிதா திருக்கரத்தால் இயக்கி வைத்துள்ளார்.
178 மெகாவாட் அளவிற்கு புதிய காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. மே 2011-லிருந்து எண்ணூர் அனல் மின்நிலையம் தவிர்த்து அனைத்து அனல் மின் நிலையங்களின் செயலாக்கம், கணிசமாக அதிகரிக்கப்பட்டு மின் சுமை காரணி 90 விழுக்காட்டிற்கு மேல் செயல்பட்டு வருகிறது. 2 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின் உற்பத்தி கூட்டப்பட்டுள்ளது. 53.25 கி.மீ நீளமுள்ள 230 கி.வோ. மின் சுற்று பாதை ஒத்தக்கால் மண்டபத்திலிருந்து பல்லடம் வரை பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளது. 400 கி.வோ. சுங்குவார்சத்திரம் துணை மின்நிலையத்தையும் 400 கி.வோ. புதுச்சேரி - திருபெரும்புதூர் மின்னூட்டியையும் இணைக்கும் 16.28 சுற்று கி.மீ நீளமுள்ள இணைப்பு பாதை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. தாம்பரம் பகுதி சுற்று வட்டாரத்திலுள்ள தாழ்வழுத்த மின் பகிர்மான குறைபாடுகளை சீர்செய்வதற்கும், சென்னை தெற்கு மண்டலத்தில் 2 புதிய 33/11 கி.வோ. துணை மின் நிலையங்களில் ஒன்று கோவிலம்பாக்கத்தில் ரூ.21.22 கோடி செலவிலும், மற்றொன்று இராஜகீழ்ப்பாக்கத்தில் ரூ.12.89 கோடி செலவில் இந்த மாத இறுதிக்குள் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார்கள். பவானி கட்டளை தடுப்பணை-2 (2 15 மெகாவாட்) 400 கோடி ரூபாய் செலவில், புனல் மின் நிலையத்தின் அலகு-1 (15 மெகாவாட்) வரும் செப்டம்பர் மாதம் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் காரணமாக சென்னை தவிர மற்ற பகுதிகளில் 3 மணிநேரமாக இருந்த மின்வெட்டு 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த ஆட்சியில் கலவரமாக இருந்த நிலை மாறி தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது, மின்நிலவரம்.
மின்வெட்டை முழுமையாக நீக்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வருமாறு:
ஆகஸ்ட் 2012 முழுமையாக மின்வெட்டு ரத்து செய்யப்படும். எந்த திட்டமாக இருந்தாலும் சாதக பாதகங்களை விரிவாக ஆய்வு செய்து அதன் பின்பு அறிவிப்புகள் வெளியிடுபவர் ஜெயலலிதா. அறிவித்தபடி மின்வெட்டு பிரச்சனை நிச்சயம் தீர்க்கப்படும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இலக்கணமாக திகழ்பவர் ஜெயலலிதா. 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாத்ததிற்குள் தமிழகத்திற்கு மின்வெட்டு முழுமையாக அகற்றப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதற்கேற்ப சில வழிமுறைகளை வகுத்து கொடுத்து இருக்கிறார். நடைமுறையிலுள்ள மின் திட்டங்களை இயக்கத்திற்கு கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2012 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாநில கட்டமைப்பு 4640 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2012ம் ஆண்டு இறுதிக்குள் மாநில கட்டமைப்பு 4,640 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் வடசென்னை நிலை-2(1,200 மெகாவாட்), மேட்டூர் நிலை -3(600 மெகாவாட்), தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்-தேசிய அனல்மின் கழகம் கூட்டு முயற்சி(1,041 மெகாவாட்), தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்-நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கூட்டு முயற்சி-தூத்துக்குடி(387 மெகாவாட்), சிறிய மற்றும் மிகச்சிறிய புனல்மின் திட்டங்கள்(7 திட்டங்கள்-90 மெகாவாட்), கூடங்குளம்(925 மெகாவாட்), பி.எப்.பி.ஆர்.கல்பாக்கம்(167 மெகாவாட்), நெய்வலி டி.எஸ்.2 (230 மெகாவாட்).
அடுத்ததாக தொலைநோக்கு பார்வையுடன் 5,100 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நீண்ட காலத்திட்டங்களாகும்.
வடசென்னை நிலை-3 (800 மெகாவாட்- எதிர்பார்க்கும் காலம் 2015ம் ஆண்டு), வடசென்னை நிலை-4 (1,600 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2016ம் ஆண்டு), உடன்குடி (1,600 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2016ம் ஆண்டு), எண்ணூர் இணைப்பு(600 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2015ம் ஆண்டு), குந்தா நீரேற்று புனல் மின் நிலையம்(500 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2016ம் ஆண்டு)
குந்தா நிரேற்று மின் நிலையம் தமிழக மின்சார பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை மத்திய அரசின் நதிநீர் ஆணையம் குந்தா திட்டம் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை என்று கூறி அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் உண்மையில் இந்த குந்தாநதி காவிரி நதியின் கிளை நதியின் கிளை நதி. இதிலே மற்ற மாநிலங்கலுக்கு சம்பந்தம் இல்லை. சம்பந்தப்பட்ட கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மூன்று மாநிலங்களுக்கும் பலமுறை கோரியும் கிடைக்கவில்லை. புதுவை மாநிலம் மட்டுமே ஒப்பந்தம் அளித்துள்ளது. மற்ற மாநிலங்கள் அனுமதி மறுவிட்டன. இது மிகவும் வருத்ததற்குரிய விஷயம் என்னவென்றால் காவிரி நீர் சம்பந்தப்பட்ட மாநிலங்களை எந்த வகையிலும் பாதிக்காத கூடுதல் தண்ணீர் தேவைகள் கிடைக்கவில்லை. காவிரி பிரச்சனைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று சொல்வதும் மாநில அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்வதும் மத்திய அரசு இந்த பிரச்சனைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதைவிட ஒரு சான்று இருக்க முடியாது. ஆகவே முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி பெற வேண்டிய முயற்சிகளை எடுத்து வருகிறார். அடுத்தடுத்து தொடர் முயற்சிகளை மேற்கொள்வார் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.