பி.ஜே.தாமஸ் தார்மீக பொறுப்பேற்று ப சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும்- மா கம்யூ.,

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
J RAMAKRISHNAN (E Com   )

 

சென்னை, மார்ச்.5-

உச்சநீதிமன்றம் கண்டித்துள்ள பி.ஜே.தாமஸ் குறித்த வழக்கு விபரத்தை மூடி மறைத்து ஊழல் பேர்வழியான அவரை தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க முக்கிய காரணமாக இருந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.எம். தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பாமாயில் ஊழல் வழக்கில் குற்றவாளியென விசாரணையில் கண்டறிந்து சி.பி.ஐ.யினால் வழக்கு தொடுக்கப்பட்டு பி.ஜே. தாமஸ் மீதான வழக்கு நடந்து கொண்டிருந்த போதும் அவரை தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது தவறு என்று உச்ச நீnullதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது நியமனம் செல்லாது என்றும் நீnullதிமன்றம் அறிவித்துள்ளது. 1990​இல் பி.ஜே. தாமஸ் கேரள மாநில உணவுத்துறை செயலாளராகப் பணிபுரிந்தபோது பாமாயில் இறக்குமதிக்கான ஒப்பந்தம் அவரால் போடப்பட்டது. அதில் ஊழல் நடந்தது என்றும், அதனால் அரசின் கருவூலத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது என்றும் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு, வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் பி.ஜே.தாமஸ் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பி.ஜே.தாமஸ் தொலை தொடர்புத் துறை செயலாளராகப் பணிபுரிந்த போது தான் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2 ஜி) ஒதுக்கீட்டு ஊழல்  நடைபெற்று, அதில் ரூ 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்ட து. அந்தக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது உச்சnullநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கில் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்தப் பின்னணியில் பி.ஜே.தாமசை தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதமர், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு பரிந்துரைத்து அதன் அடிப்படையில் அவர் நியமனம் செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது என்று அந்த குழுவில் உறுப்பினராக இருந்த எதிர் கட்சித் தலைவர் கூறிய ஆட்சேபணையையும் புறந்தள்ளி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து கடுமையான ஆட்சேபணை எழுந்த பின்னும், கடும் விமர்சனங்கள் வந்த போதும் அதை பிரதமரும், உள்துறை அமைச்சரும் நியாயப்படுத்தியே வந்தனர். உச்ச நீnullதிமன்ற விசாரணையில் கூட ஊழல் பேர்வழியை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது சரியென்றே மத்திய அரசு வாதிட்டது. ஆனால் மத்திய அரசின் வாதத்தை நிராகரித்த உச்ச நீnullதிமன்றம் பி.ஜே.தாமசின் நியமனத்தை ரத்து செய்ததோடு, அரசுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

பி.ஜே.தாமஸ் குறித்த வழக்கு விபரத்தை மூடி மறைத்து, ஊழல்பேர்வழியான அவரை தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்த குழுவில் அங்கமாக இருந்த ப. சிதம்பரம் தேசத்திற்கே அவமானத்தைத் தேடித்தந்துள்ளார். இத்தகைய முடிவெடுத்ததற்குத் தார்மீக பொறுப்பேற்று அவர் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: