முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்சபையில் பா.ஜ. - தி.மு.க. இடையே கடும் மோதல்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.24 - பாராளுமன்ற லோக்சபையில் நேற்று எந்த பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.-தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கை பாதித்தது.லோக்சபையில் நேற்று பாரதி ஜனதா உறுப்பினர்கள் எழுந்து அன்னா ஹசாரே உண்ணாவிரதம், ஊழல் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் கோரினர். இதனால் சபையின் நடவடிக்கைகள் பாதித்தன. சபை முதல் தடவையாக ஒத்திவைக்கப்பட்ட பின்னர் மீண்டும் கூடியது. அப்போது கேள்வி நேரத்திற்கு பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் நிகழ்ச்சிகளை மேஜையில் எடுத்துவைக்கும்படி கூறிவிட்டு இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் பிரச்சினை குறித்து பேசும்படி தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலுவை கேட்டுக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாரதிய ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நிகழ்ச்சி நிரல்களை சபையில் வைக்கும்போது ஊழல் மற்றும் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினீர்கள். ஆனால் தற்போது இலங்கை பிரச்சினை குறித்து பேச கூறுகிறீர்களே என்று சத்தப்போட்டு பேசினர். சபையின் மத்திய பகுதிக்கும் சென்று அவர்கள் சத்தமாக பேசிக்கொண்டே இருந்தனர். காலையில் சபை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கோரியபடி கேள்வி நேரத்திற்கு பின்னர் ஊழல் குறித்து முதலில் விவாதிக்கப்படும் என்று கூறினீர்களே என்று சபாநாயகர் மீரா குமாரை பார்த்து பா.ஜ. உறுப்பினர்கள் கேட்டனர். பா.ஜ. உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு வந்திருப்பதை பார்த்த தி.மு.க. உறுப்பினர்களும் சபையின் மத்திய பகுதிக்கு வந்தனர். சபையின் மத்தியில் கூடிய அவர்கள், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முதலில் பேசும்படி டி.ஆர.பாலுவை சபாநாயகர் மீரா குமார் கேட்டுக்கொண்டார். இது முடிந்தவுடன் ஊழல் பிரச்சினை குறித்து விவாதிக்கலாம் என்றார். ஆனால் அதை கேட்காத பா.ஜ. உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் போட்டுக்கொண்டே இருந்தனர். அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய இருக்கைக்கு செல்லும்படி கேட்டுக்கொண்ட மீரா குமார், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து சுறுக்கமாக பேசும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். பா.ஜ. உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் சபையின் மத்திய பகுதிக்கு கோஷமிட்டர். இவர்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிஸ் ராம் ஓலா, குமார செல்ஷா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் சபையை பிற்பகல் 2 மணி வரை மீரா குமார் ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்