முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைகேடு: எடியூரப்பா மீது மேலும் ஒரு வழக்கு

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர்,ஆக.24 - சுரங்க முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது மேலும் ஒரு வழக்கை லோக்அயுக்தா போலீசார் பதிவு செய்துள்ளனர்.எடியூரப்பாவின் மகன்களுக்கு சொந்தமான பிரேரணா அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நன்கொடை அளித்ததாக கூறப்படும் ஜிந்தால் மற்றும் சவுத்வெஸ்ட் நிறுவனங்களின் மீதான சுரங்க முறைகேடு புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியுரப்பா ஆட்சியின் போது கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சுரங்க முறைகேடுகளால் அரசுக்கு ரூ. 16 ஆயிரத்து 85 கோடி இழப்பு ஏற்பட்டதாக லோக் அயுக்தா அறிக்கை குற்றம் சாட்டியது. இதனால் எதிர்ப்புகளும், நிர்பந்தங்களும் வலுத்ததால் எடியூரப்பா முதல்வர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து சுரங்க முறைகேடுகள் தொடர்பாக அவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கை லோக்அயுக்தா போலீசார் பதிவு செய்துள்ளனர். லோக்அயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போதைக்கு கைது இல்லை. இந்த வழக்கு பற்றி செய்தியாளர்களிடம் லோக்அயுக்தா ஏ.டி.ஜி.பி. காவகர் கூறும் போது, 

ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தவுடன் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்ய வாய்ப்புள்ளது. இப்போது அது குறித்து எதுவும் கூற இயலாது என்றார். ஏற்கனவே நில மோசடி வழக்கில் எடியூரப்பா நீதிமன்றத்தில் வரும் 27 ம் தேதி ஆஜராக லோக்அயுக்தா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்