முக்கிய செய்திகள்

தேசிய உற்பத்தி கொள்கை விரைவில் அறிவிப்பு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.25 - தேசிய உற்பத்தி கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனந்த சர்மா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  நாட்டில் உற்பத்தி அதிகரித்தால்தான் வேலைவாய்ப்பு பெருகுவதோடு ஏற்றுமதியும் அதிகரித்து அன்னிய செலாவாணி அதிக அளவில் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு உற்பத்தியை பெருக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று நேற்று பாராளுமன்ற ராஜ்யசபையில் மத்திய வர்த்தம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அனந்த் சர்மா தெரிவித்தார். அடுத்த 2025-ம் ஆண்டிற்குள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி 16 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக அதிகரிக்கும் வகையிலும் அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும் இந்த புதிய கொள்கை இருக்கும் என்றும் அமைச்சர் அனந்த சர்மா தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழுவானது இந்த புதிய உற்பத்தி கொள்கைக்கு அனுமதி கொடுத்துவிட்டது. உலகத்தரம் வாய்ந்த தொழில்பேட்டைகள் அமைக்கவும் இந்த புதிய தொழில் கொள்கை வகை செய்கிறது. புதிய தொழில் கொள்கையால் நாட்டில் வரும் 2025-ம் ஆண்டிற்குள் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துக்கொடுக்கும். நாட்டின் உற்பத்தியானது இதர நாடுகளை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது. அதனால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கப்படும். தொழிலாளர்கள் மற்றும் சுற்றுப்புறசூழல் விஷயத்திலும் விதிமுறைகள் தளர்த்தப்படும் என்றும் அமைச்சர் அனந்த சர்மா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: