முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரேவுக்கு விதர்ப்பா பகுதி எம்.பி.க்கள் ஆதரவு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

நாக்பூர்,ஆக.25 - ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேவுக்கு விதர்ப்பா பகுதியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டில் மலிந்துவிட்ட ஊழலை ஒழிக்க காந்தீயவாதி அன்னா ஹசாரே நேற்று 9-வது நாளாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதரப்பா பகுதியை சேர்ந்த 2  எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்னா ஹசாரேயின் இயக்கத்துடன் இருக்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. வர்தா தத்தா மெஹே கூறியுள்ளார். ஊழலை ஒழிக்க அனைவரும் விரும்புவதால் மக்கள் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று மெஹே நேற்று நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் நான் ஹசாரேவுடன் இருக்கிறேன். ஆனால் பாராளுமன்றம்தான் சட்டத்தை இயற்றுகிறது. இந்த பிரச்சினையில் என் கட்சி முடிவை நான் பின்பற்றுவேன் என்றும் மெஹே மேலும் கூறினார். 

ஹசாரேயின் மக்கள் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு கொடுப்பதாக பாரதிய ஜனதா தலைவர் நிதீன் கட்காரிக்கு சந்திரபூர் லோக்சபை எம்.பி. ஹன்ஸ்ராஜ் அஹிர் கடிதம் எழுதியுள்ளார். ஹசாரேயின் மக்கள் லோக்பால் மசோதாவுக்கு நாட்டு மக்களிடையே ஆதரவை பெற்றுள்ளது. மத்திய அரசின் லோக்பால் மசோதாவில் சட்ட உடைசல்கள் உள்ளன. அதனால் ஹசாரே தலைமையிலான குழுவினர் தயாரித்த மக்கள் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் ஹன்ஸ்ராஜ் அஹிர் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்