முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் நெருக்கடி நிலை சட்டம் வாபஸ்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,ஆக.27 - இலங்கையில் நெருக்கடி நிலை சட்டம் விலக்கி கொள்ளப்படுவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 1983 ம் ஆண்டில் இருந்து நெருக்கடி நிலை சட்டம் அமலில் இருந்து வருகிறது. கடந்த 2009 ம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. சர்வதேச அளவில் இச்சட்டம் விலக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு அதிபர் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் பேசுகையில், 

இனி நெருக்கடி நிலை சட்டம் தேவையில்லை என்று கருதுவதால் அதை நீட்டிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். மேலும் இச்சட்டத்தை விலக்கி கொள்வதன் மூலம் நாட்டின் செயல்பாடுகள் சாதாரண சட்டங்கள் மற்றும் ஜனநாயக முறையில் நடைபெற வழி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடந்த 2009 ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒரு தீவிரவாத நடவடிக்கை கூட நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்