முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஓவர் போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மான்செஸ்டரில் இன்று மோதல்

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர், ஆக. - 31  - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று நடக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று ப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.  இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி     0 - 4 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் ஆக்கியது.  இந்தத் தோல்வி இந்திய அணிக்கு இதுவரை இல்லாத மோசமான தோல்வியாக கருதப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையி ல், இந்திய அணி இன்று நடைபெறும் 20 ஓவர் போட்டியில் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.  இங்கிலாந்து அணி நடப்பு 20 ஓவர் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக் கது. டெஸ்டில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு இந்திய அணி 3 பயிற் சி ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்றது. இதனால் இந்திய வீரர்க ள் இன்றைய போட்டிக்காக மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் ஏற்கனவே இந்தத் தொடரில் இருந்து விலகி இருந்தார். மற்றொரு தொடக்க வீரர் காம்பீரும் இன்றைய போட்டியில் ஆடவில்லை. பயிற்சி ஆட்டத்தில் பார்த்திவ் பட்டேல் நன்றாக ஆடியதால் தொடக்க வீரராக இன்று ஆடுவார்.
டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய கேப்டன் தோனி, ரெய்னா ஆகி யோர் 20 ஓவர் போட்டியில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தப் போட்டிக்காக இந்திய அணி புதிய வியூகம் அமைத்து வருகிறது.
இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆதிக் கம் செலுத்தும். டெஸ்டைப் போலவே அந்த அணி 20 ஓவர் போட்டி யிலும் வெற்றி பெற முயற்சிக்கும்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி மான்செஸ்டர் நகரில் இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்