முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி பெடரர், வீனஸ், ஷரபோவா வெற்றி

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க், ஆக. - 31 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக முன்னாள் நம்பர் - 1 வீரரான ரோஜர் பெடரர் மற்றும் மகளிர் பிரிவில் வீனஸ் வீல்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்று க்கு முன்னேறினர்.  இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.  இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்ட த் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.  ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந் த து. இதில் சுவிஸ் முன்னணி வீரரான ரோஜர் பெடரரும், கொலம்பி யா வீரர் சாண்டிகோவும் பலப்பரிட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் உலக முன்னாள் நம் பர் - 1 வீரரான ரோஜர் பெடரர் 6 - 4, 6  - 3, 6 - 2 என்ற செட் கணக்கில் கொலம்பியா வீரரை தோற்கடித்து 2 -வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதே போல, மார்டி பிஷ், மாரின் கிளிக், டாமிஹாஸ், ரிச்சர்டு ஹா ஸ்கட், ஸ்டெபானிக், டோல்கோ போலோ ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். ஆனால் முன்னணி வீரர்களில் ஒருவரான பெர் னாண்ட் ஹன்சலாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் ரஷ்ய முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவாவும், இங்கிலாந்து வீராங்கனை வாட்சனும் மோதினர்.
இதில் விம்பிள்டன் முன்னாள் சாம்பியனான மரியா ஷரபோவா அபாரமாக ஆடி, 3 - 6, 7 - 5, 6 -3 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து வீராங்கனையை தோற்கடித்து 2 -வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்சும், ரஷ்ய வீராங்கனை வெஸ்னாவும் மோதினர். இதில் வீனஸ் 6 - 4, 6 - 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
தரவரிசையில் 5 -வது இடத்தில் உள்ள செக். குடியரசு வீராங்கனை  பெட்ரா வெட்டோவா 7 - 6(3), 6 - 3 என்ற செட் கணக்கில் அலெக்சாண் டிராவிடம் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
தவிர, மற்ற போட்டிகளில் வெரா வெனோரவா, மரியன் பர்ட்டோ லி, ரத்வான்ஸ்கா, சமந்தா ஸ்ட்வார்ஸ்வர், ஜிபுல் கோவா, நடியா பெட்ரோவா, கிர்லிங்கோ, லூசியா ஷரபோவா ஆகியோர் வெற்றி பெற்று 3 -வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்