முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் உழைப்பவர் ஜெயலலிதா-ஆர்.பி.உதயகுமார் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சாத்தூர்,செப்.- 4 - தமிழக மக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருப்பவர் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தகவல் தொழில் நுட்ப துறைஅமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் சாத்தூர் தொகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது நள்ளிரவு கண்மாய்சூரங்குடி கிராமத்தில்  அவர் பேசியதாவது; சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராகவும் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அ.தி.மு.க. அரசு அமையவும், மூன்றாவது முறையாக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவியேற்கவும் வழிவகுத்து, மாபெரும் வெற்றியை தந்த மக்களுக்கு, தேவையான அத்தனை அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, சமுதாயக்கூடம், மின்சாரவசதி, பள்ளிக்கூடம், மருத்துவவசதி, மயான சாலை, ரேஷன் கடை, பஸ்வசதி என மக்கள் தந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அவையாவும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தரப்படும் என்று அமைச்சர் கிராம மக்களிடம் நன்றி தெரிவித்துப்பேசுகையில் தெரிவித்தார்.  கிராமங்களுக்கு சென்ற அமைச்சரை மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொதுநல சங்கங்கள் சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்றனர். ஆலயங்களிலும் சிறப்பு பூஜை செய்து அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். சாத்தூர் அருகே உள்ள ஆலம்பட்டியில் இருந்து தனது நன்றி அறிவிப்பு பயணத்தை துவக்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அணைக்கரைப்பட்டி, வாழவந்தாள்புரம், சாமியார்காலனி, அம்மாபட்டி, குமரெட்டியாபுரம், ருக்குமிஞ்சி, ராமலிங்காபுரம், அமீர்பாளையம், அய்யம்பட்டி, பெரியகொல்லப்பட்டி, நீராவிப்பட்டி, தெற்கூர், தெற்கூர்காலனி, சின்னகொல்லபட்டி, சடையம்பட்டி, புதுப்பாளையம், சத்திரபட்டி, இந்திராகாலனி, நாரணாபுரம், மீனாட்சிபுரம், கண்மாய்சூரங்குடி, ஒத்தையால் ஆகிய கிராமகளுக்கு அமைச்சர் சென்றார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். கிராம மக்களின் பிரச்சனைகள் கேட்டறிந்தார். இந்த நன்றியறிவிப்பு பயணத்தில் ஆயிரக்கணக்கான மனுக்கள் அமைச்சரிடம் மக்கள் தந்தனர். பெரும்பாலான மனுக்கள், முதியோர் உதவித்தொகை கோரி வழங்கப்பட்டிருத்தன.  அ.தி.மு.க. சார்பாகவும் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பல கிராமகங்களில்  தேவர்சிலை, அம்பேத்கார் சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்தார்.
பல கிராமங்களில் முதியோர்களிடம் அமைச்சர் ஆசி பெற்றார். கடந்த ஆட்சியாளர்களைப் போல அல்லாமல் வாக்களித்த மக்களுக்கு என் பணியை செய்ய நான் மீண்டும் மீண்டும் உங்களை தேடி வந்து கொண்டிருப்பேன். உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன். அரசு வழங்கும் அத்தனை இலவச திட்டங்களும் உங்களுக்கு வந்து சேர சிறப்புடன் செயல்படுவேன் இந்த அரசு மக்களை இல்லம் தேடி வந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
தமிழக  முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்காக அயராது 24 மணி நேரம் இரவு பகல் பாராமல்  உழைத்துக்கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அமைச்சருடன் சாத்தூர் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், சக்தி கோதண்டம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முருகையா பாண்டியன், சுப்புராம், வாசன், வக்கீல் முருகன், கெளரி நாகராஜன், சாத்தூர் வேலாயுதம், அம்மாபேரவை முனீஸ், இளைஞர் அணி சண்முகக்கனி, கேபிள் கண்ணன், சாமி, சுப்புலெட்சுமி, ராமராசு, தாசன், அழகுராஜ், குன்பாறை ராஜ், காசிபாண்டியன், சுப்பிரமணியன், பொன்பாண்டியன், நத்தத்துப்பட்டி வாழவந்தான் ஆலங்குளம் ஈஸ்வரி, சிவகாசி கே.எஸ். கந்தசாமி, புதூர் மயில்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி செயலாளர் சிந்து முருகன், ராமையா பாண்டியன், கீதா வீரோவுரெட்டி, வக்கீல் லோகேஸ், செவல்பட்டி முருகன், முன்னாள் சேர்மன் ரவிச்சந்திரன், அண்ணா பேரவை தமிழ்ச்செல்வன், ரெட்டியாபட்டி சமுத்திரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்