முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் கொட்டும் மழையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

ஊட்டி, செப்.- 4 - ஊட்டியில் கொட்டும் மழையில் 3 நாளில் 25 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊட்டிக்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரியில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகவும், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இரண்டாம் சீசன் காலங்களாகவும் உள்ளன.  இந்த நிலையில் இரண்டாம் சீசன் காலம் தொடர் விடுமுறை நாட்களுடன் துவங்கியுள்ளது. ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி அத்துடன் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர் விடுமுறை காலமாக உள்ளதால் ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் குவியத்துவங்கியுள்ளனர். தற்போது ஊட்டியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தவாறே அரசு தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாவது சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 750 மலர் தொட்டிகளில் மலர்செடிகள் வளர்க்கப்பட்டு கண்காட்சி மாடத்தில் வைக்க தயார் நிலையில் உள்ளன. ஆனால் தொடர்மழை பெய்து வருவதால் இப்பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குநர் டாக்டர் ராம் சுந்தர் கூறியதாவது:​ ஊட்டியில் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இரண்டாம் சீசன் காலங்களாகும். இக்காலகட்டத்தில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தருவர். தற்போது தொடர்ந்து விடுமுறை வந்ததாலும் வரும் வாரத்தில் ஓணம் பண்டிகை வருவதால் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவை காண வருவார்கள். இரண்டாவது முன்னிட்டு 7500 மலர்தொட்டிகளில் மலர்செடிகள் வளர்க்கப்பட்டு பூங்காவில் உள்ள கண்காட்சி மாடத்தில் வைக்க தயாராக உள்ளன. தொடர்ந்து மழைபெய்து வருவதால் இப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ஓரிருநாளில் மழை நின்றவுடன் மலர்தொட்டிகள் யாவும் கண்காட்சி மாடத்தில் வைக்கப்படும். கடந்த மூன்று நாட்களில் மட்டும் அரசு தாவரவியல் பூங்காவிற்கு 25 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்  வருகை தந்துள்ளனர் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்