முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு வக்கீல் வீட்டில் சோடா பாட்டல் வீச்சு:மதுரை துணை மேயர் மன்னனும் கைதாகிறார்

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 5 - மதுரை திமுக நிர்வாகிகளை தொடர்ந்து மதுரை துணை மேயர் மன்னன் கைதாகிறார். அரசு வக்கீல் வீட்டில் சோடாபாட்டல் வீசிய வழக்கில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.   மதுரையில் நில அபகரிப்பு, கொலை, மிரட்டல் என பல்வேறு வழக்குகளின் கீழ் மதுரை மாநகர், மாவட்ட திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை திெமுக துணை மேயர் மன்னன் மீது மட்டும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மதுரை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்செல்வன் மொபைல் போனில் பேசிய மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் சம்பவத்தன்று இரவு அவரது வீட்டிற்குள் சோடா பாட்டில்களை ஒரு கும்பல் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி திமுக துணை மேயர் பி.எம்.மன்னன், நான்காம் பகுதி செயலாளர் ஜெயராமன் ஆகியோர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ்செல்வனின் மொபைல் போனுக்கு செப் 1 ம் தேதி மாலை 4.30 மணிக்கு அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்ம நபர் ஜெயராமன், மன்னன் வழக்கில் தலையிடக்கூடாது. கைது செய்ய முயற்சி செய்யக்கூடாது மீறினால் தலை இருக்காது என மிரட்டி விட்டு தொடர்பை துண்டித்து விட்டார். இது குறித்து தமிழ்செல்வன் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து தமிழ்செல்வன் வீட்டின் மீது சோடா பாட்டல் வீசப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் பார்வையிட்டார். இது தொடர்பாக துணை மேயர் மன்னன், ஜெயராமன் ஆகியோர் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் துணை மேயர் மன்னனும், ஜெயராமனும் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்