முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே மாத குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் ஒத்திகையா?

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.8  - டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் கடந்த மே மாதமும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அந்த குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் ஒத்திகையாக இருக்கலாம் என்று இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 4 மாதங்களில் 2 வது முறையாக குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் எந்த ஒரு உளவுத் தகவலும் இல்லை. கடந்த மே மாதம் 7 வது நுழைவு வாயிலில் குண்டு வெடித்தது. இப்போது 5 வது நுழைவு வாயிலில் குண்டு வெடித்துள்ளது. 

ஆனால் முந்தைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து இறுக்கமான பாதுகாப்பு போடப்படவில்லை. இப்போது 9 பேர் கொல்லப்பட்டு விட்டனர். பொதுவாக அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் இன்றைய குண்டு வெடிப்பு சம்பந்தமாக எந்த படமும் நமக்கு கிடைக்கவில்லை. மேலும் நுழைவு வாயில்களில் தீவிர கண்காணிப்பும் இல்லை. மே 25 ல் நடந்த சம்பவத்தை பார்க்கும் போது அது ஒரு பெரிய தாக்குதலுக்கு முந்தைய ஒத்திகையாகவே போலீசார் கருதுகின்றனர். அந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்றைய சம்பவத்திற்கு ஒத்திகையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!