முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் சோனியா

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.9  - அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று அதிகாலை டெல்லி திரும்பினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு கடந்த மாதம் 4 ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு துணையாக அவரது மகள் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் இருந்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி கடந்த வாரம்தான் அமெரிக்கா சென்று சோனியாவை பார்த்து விட்டு வந்தார். 

இந்நிலையில் சோனியா விரைவில் பூரண குணமடைய கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளை நடத்தினர். பூரண குணமடைந்ததை தொடர்ந்து நேற்று காலை தன் மகள் பிரியங்காவுடன் சோனியா டெல்லி வந்திறங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!