முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுமுகங்கள் நடிக்கும் `தேன்மொழி தஞ்சாவூர்'

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.11 - ஒரு குடும்பத்தில் கணவன் தடம் புரண்டாள் குடும்பத்தின் நிலை என்னவாகும்? அதே போல் குடும்ப்ததில் மனைவி தடம் மாறினாள் குழந்தைகளின் நிலை என்ன? சமுதாயம் என்ன பேசும் என்பதை கதையின் கருவாய் வைத்து புதிய படம் ஒன்றை சாய் இண்டர் நேஷ்னல் நிறுவனத்தினர் `தேன்மொழி தஞ்சாவூர்' படத்தினை தயாரிக்கின்றனர்.

சூரியன் நாயகனாகவும் ராசி நாயகியாகவும் நடிக்கும் இதில் பிரியங்கா, கார்த்தி, எஸ்.கே.பிரகாஷ், நிழல்கள் ரவி, நெல்லை சிவா, மயில்சாமி, சபீதா ஆனந்த், ரிஷா, சங்கர் ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீஎடிட் செய்ய ராஜவேலு தயாரிப்பு நிர்வாகமிட, ஸ்ரீகருண் நடன பயற்சியையும், ஸ்பீடு மோகன் சண்டை பயிற்சியையும், வி.டி.குமார் கேமராவையும் கவனிக்கின்றனர்.

ஆரூர் சிவா, நாஞ்சில் ராஜன் இருவரும் பாடல்கள் எழுத ரவீந்திரன் கலையையும் இந்தியன் இசையையும் கவனித்துள்ளனர்.

ஊட்டி, பாண்டிச்சேரியில் படம் வளர்ந்துள்ளது. இ.முருகம்மாள், இ.ஜானகிராமன், இ.துரை, இ.எஸ்.சங்கர்ஜி நால்வரும் கூட்டாக தயாரிக்கின்றனர்.

திரைப்பட கல்லூரி மாணவரான எஸ்.கே.பிரகாஷ் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி நடித்து டைரக்ட் செய்கிறார்.

விரைவில் திரைக்கு வருகிறது `தேன்மொழி தஞ்சாவூர்'.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்